Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, September 9, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம்!


08.09.2023 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, LMR அறையில், BSNLEU சேலம் மாவட்ட சங்க செயற்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, மாவட்ட செயலர் தோழர் E. கோபால் ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளாளர் தோழர் M. சண்முகம் அஞ்சலி உரை நிகழ்த்த, செவ்வை கிளை தலைவர் தோழர் B. விரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், மாநில அமைப்பு செயலாளர் தோழர் R. ரமேஷ் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். பின்னர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E. கோபால் அறிமுக உரை வழங்கினார். AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

கடந்த செயற்குழுவுக்கு பின் பணி நிறைவு செய்த தோழர்களும், மாற்று சங்கத்தில் இருந்து விலகி, BSNLEU  பேரியக்கத்தில் இணைந்த தோழர்களும், கௌரவப்படுத்தப்பட்டனர். பின்னர், உணவு இடைவேளைக்காக செயற்குழு ஒத்திவைக்கப்பட்டது. 

உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், 22 செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதில் அளித்து தொகுப்புரை வழங்கியபின், கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. சேவை மேம்பாடு சம்பந்தமான ஆலோசனைகள் /கருத்துக்களை தொகுத்து, மாவட்ட நிர்வாகத்தை பேட்டி காண்பது.

2.  தல மட்ட கவுன்சில், Local Council கூட்டத்திற்கு, அஜண்டாவை கிளைகள், 15 தினங்களுக்குள் மாவட்ட சங்கத்திற்கு வழங்குவது.

3. மாவட்டம் முழுவதும், கிளை கூட்டங்களை உடனடியாக நடத்துவது.  

4. TNTCWU சங்க மாவட்ட மாநாடு நடத்துவதற்கு வழிகாட்டுவது.

5. உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, BSNLWWCC மாவட்ட மாநாட்டை அக்டோபர் மாதத்தில், சேலத்தில் நடத்துவது.

6. காப்பர் இணைப்பகங்கள் மூடப்படுவதால், ஏற்படும் வேலை இழப்பிலிருந்து, ஒப்பந்த ஊழியர்களை காப்பதற்கு, மாற்று வழிகளை, மாவட்ட நிர்வாகத்தோடு பேசி இறுதிப் படுத்துவது.

தோழர் D. பிரசாத், மாவட்ட அமைப்புச் செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். சிறப்பான ஏற்பாடுகள் செய்த செவ்வை கிளையை, மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

மொத்தத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் விவாதங்கள் செழுமையாக இருந்தது. மாநில, மாவட்ட சங்க நன்கொடைகளை ஆத்தூர், GM அலுவலகம், ராசிபுரம், பரமத்தி வேலூர், சங்ககிரி, சேலம் மெயின், சேலம் செவ்வை ஆகிய கிளைகள் 100% பூர்த்தி செய்தது, பாராட்டுக்குரியது. ஓமலூர், மேட்டூர், மெய்யனூர், நாமக்கல் கிளைகள் முதல் தவணை வழங்கியதும் நல்ல அம்சம். 10 நாட்களுக்குள் கிளைகள்,  நன்கொடைகளை முழுமையாக வழங்க வேண்டும். செயற்குழு முடிவுகளை கிளைகள் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என, தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர்