Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 8, 2023

விருதுநகரில் நடைபெற்ற BSNLWWCC 4வது மாநில மாநாடு


தமிழ்நாடு மாநிலத்தின் BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாடு, விருதுநகரில், 05.08.2023 அன்று உற்சாகமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு, BSNL WWCC யின் முன்னாள் அகில இந்திய அமைப்பாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் P. இந்திரா தலைமை ஏற்று தலைமையுரை நிகழ்த்தினார். BSNL ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஜெயகுமார், வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

BSNL WWCCயின் அகில இந்திய குழு உறுப்பினர் தோழர் G. உமா ராணி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். BSNL WWCCயின் அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N.ஜோதிலட்சுமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். செயல்பாட்டு அறிக்கையினை தமிழ்நாடு மாநிலக் குழு அமைப்பாளர், தோழர் பெர்லின் முன் வைத்தார்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு தனது சிறப்புரையில், BSNL ஊழியர் சங்கம், அகில இந்திய மட்டத்தில் எடுத்துள்ள, பெண் ஊழியர்களின் பிரச்சனைகளை விளக்கி பேசினார். மேலும் , ஊதிய மாற்றம், BSNL ன் 4G / 5G துவக்கம், புதிய பதவி உயர்வு கொள்கை மற்றும் ஊழியர்களின் இதர பிரச்சனைகள் ஆகியவற்றையும் விளக்கி பேசினார்.

BSNL ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் P. ராஜு மற்றும் TNTCWU மாநில செயலாளர் தோழர் M.சையது இத்ரீஸ் ஆகியோர் இந்த மாநில மாநாட்டை வாழ்த்தி பேசினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற சார்பாளர்கள், உயிரோட்டமுள்ள, நல்லதொரு விவாதத்தினை நடத்தினர். அதன்பின் சர்பாளர்கள் முன்வைத்த பல்வேறு அகில இந்திய பிரச்சனைகளுக்கு, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு பதிலளித்து உரை நிகழ்த்தினார். இறுதியாக, மாநில அமைப்பாளர் தோழர் பெர்லின் கனகராஜ், தொகுப்புரை வழங்கினார்.

இந்த மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள், ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. புதிய மாநிலக் குழுவும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டது. தோழியர் குமுதவல்லி நன்றியுரை வழங்கி மாநாட்டை நிறைவு செய்தார்.

நமது சேலம் மாவட்டத்திலிருந்து, GM அலுவலக கிளை தோழர்கள் கவிதா, கலைச்செல்வி, கிருஷ்ணம்மாள் கலந்து கொண்டனர். GM அலுவலக கிளை செயலர் தோழர் J. ஸ்ரீனிவாசராஜு தோழர்களை விருதுநகருக்கு அழைத்து சென்று வந்து வந்தார். தோழர் D. கவிதா, மாநில குழுவிற்கு தேர்வாகியுள்ளார். புதிய மாநிலக்குழுவிற்கு சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்