20.07.2023 - தேசிய கோரிக்கை தினம்
கிளைகளில் ஆர்ப்பாட்டம்
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.07.2023 அன்று தேசிய கோரிக்கை தினம் கடைபிடிக்க வேண்டுமென, TNTCWU உள்ளடக்கிய BSNL CCWF சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.
1) BSNLல் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யாதே!
2) BSNLக்கு சிறந்த சேவை தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை, முறையாக பயன்படுத்துக!
3) CLUSTER முறையிலான OUTSOURCING முறையில் பணி புரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு விதிகளின் படி ஊதியமும், பலன்களும் வழங்குக!
4) தற்காலிக ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமலாக்குக! அவர்களை நிரந்தரப்படுத்துக!
BSNLCCWF / TNTCWU அமைப்புகளின் அறைகூவலை, நமது மாவட்டத்தில், ஒருங்கிணைப்பு குழு, CoC., சார்பாக, கிளைகளில், கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.07.2023 வியாழன் அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E. கோபால்,
கன்வீனர், CoC
குறிப்பு: சேலம் நகர கிளைகள் சார்பாக, GM அலுவலகத்தில் 20.07.2023, வியாழன் அன்று காலை 11 மணி அளவில், ஆர்ப்பாட்டம் நடைபெறும்.