ஊதிய மாற்ற பிரச்சனையை விவாதிக்க, மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு அஷ்வினி வைஷணவ் அவர்களை சந்திக்க, அவரிடம் வேண்டுகோள் விடுக்கலாம் என 07.02.2023 அன்று நடைபெற்ற JOINT FORUM OF NON-EXECUTIVE UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு, JOINT FOURM இன்று (11.02.2023), கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கீழ்கண்ட விஷயங்கள் முக்கியத்துவப் படுத்தப் பட்டுள்ளன:-
1) 3வது ஊதிய மாற்றக் குழு வகுத்திருந்த வரையரைகளை, இந்நிறுவனம் பூர்த்தி செய்யாத காரணத்தால், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மறுக்கப்படுகிறது.
2) அதே நேரத்தில், ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டு, அதனை தனது ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமென, 27.04.2018 அன்று, CMD BSNLக்கு, DoT கடிதம் எழுதியுள்ளது.
3) விரைவில் முடிவு காணக்கூடிய வகையில், ஊதியமாற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென, AUAB மற்றும் BSNL நிர்வாகத்திற்கும் இடையே, 03.12.2018 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா வழிகாட்டுதல் வழங்கியிருந்தார்.
4) DoTயிலிருந்து BSNLல் DEPUTATIONல் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், 7வது ஊதியக் குழு பரிந்துரையின் படி, ஊதிய மாற்றம் மற்றும் அலவன்ஸ்கள் மாற்றம் அனைத்தையும் பெற்று விட்டனர். ஆனால் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் கிடைக்கவில்லை.
5) மொத்தமுள்ள, 30,000 BSNL ஊழியர்களில், 10,000 பேர் ஊதிய தேக்க நிலையால் (STAGNATION) பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஊதிய மாற்றம் உடனடியாக நடைபெற வேண்டும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்