BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சிகளின் காரணமாக, BSNLல் உள்ள ஊழியர்களுக்கு, ஏற்கனவே குழுக்காப்பீட்டு திட்டம் (GTI) அமலாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் வருடாந்திர புதுப்பித்தலுக்கான கடைசி தேதி 17.02.2023.
01.03.2023 முதல் திட்டம் அமுல்படுத்தப்படும்.
இதற்கான வழிகாட்டுதல்களை கார்ப்பரேட் அலுவலகம், 08.02.2023 அன்று வெளியிட்டுள்ளது. விருப்பத்தை வழங்குவதற்கு, சாளரம் (WINDOWS) 11.02.2023 முதல் 17.02.2023 வரை 7 நாட்கள் திறந்திருக்கும். இதில் இணைய விரும்பும் ஊழியர்கள், இதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். இந்தக் காலத்தில், தற்போது இந்த திட்டத்தில் ஏற்கனவே இணைந்துள்ள தோழர்களும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய தோழர்களும், இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதற்குமான சாளரம் (WINDOWS) 18.02.2023 முதல் 20.02.2023 வரை 7 நாட்கள் திறந்திருக்கும்.யாராவது ஒருவர், விலகிக்கொள்ள விரும்பினாலும், விலகிக் கொள்ளலாம். இந்த முறை தன்னிச்சையாக, தானாகவே புதுப்பித்துக் கொள்ளாது. எனவே, இந்த திட்டத்தில் தொடர விரும்பும், பழைய உறுப்பினர்கள், கண்டிப்பாக புதிதாக விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
ONLINE விருப்பமே இறுதியானது. இணையவோ, விலகிக் கொள்ளவோ, பேப்பரில் எழுதி கொடுக்கும் விண்ணப்பங்கள், எந்தக் காரணத்திற்காகவும், ஏற்றுக் கொள்ளப்படாது.
20 லட்சம் காப்பீட்டிற்கு, 15.09.1972க்கு முன் பிறந்தவர்களாக இருந்தால், நாள் ஒன்றுக்கு பிரீமியம் ரூ 49.78. 15.09.1972 க்கு பின் பிறந்தவர்களாக இருந்தால், நாள் ஒன்றுக்கு பிரீமியம் ரூ 10.35 மட்டுமே. சிந்தித்து, செயல்படவும்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்