Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 8, 2023

07.02.2023 - JOINT FORUM - ஆர்ப்பாட்டம்


ஊதிய மாற்ற கோரிக்கை, மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு கொள்கை, BSNL  நிறுவனத்திற்கு 4G / 5G சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்,  "JOINT FORUM OF NON-EXECUTIVE UNIONS AND ASSOCIATIONS OF BSNL" என்கிற பதாகையின் கீழ், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த JOINT FORUM அமைப்பு அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி 07.02.2023 அன்று சேலம் GM அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு BSNLEU மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன் தலைமை  தாங்கினார். மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினார்.

போராட்டத்தை முறைப்படி, BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ்  துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, மாநில நிர்வாகி தோழர் T. பழனி, TNTCWU  மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் 120க்கும் மேற்பட்ட தோழர்கள் (20 பெண் தோழர்கள்) திரளாக கலந்து கொண்டனர். AIBDPA, TNTCWU  சங்க தோழர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 

தோழமையுடன்,
E. கோபால்,  
மாவட்ட செயலர்