Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 15, 2022

தமிழ் மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில BSNLEU சங்கங்களின் இணைந்த, விரிவடைந்த மாநில செயற்குழு


13.09.2022 அன்று, தமிழ் மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கங்களின் இணைந்த மாநில செயற்குழு, சென்னை மஹாராஷ்ட்ரா பவனில் எழுச்சியுடன் நடைபெற்றது. 350க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற இந்த இணைந்த மாநில செயற்குழுவை, தமிழ் மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைவர் தோழர் S.பாஷா ஆகியோர் கூட்டு தலைமையேற்று நடத்தினர்.

BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா, விண்ணதிரும் கோஷங்களுக்கு இடையே நமது சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். இரண்டு மாநில சங்கங்களின் தலைவர்களும், தலைமையுரை ஆற்றிய பின்னர், தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர் தோழர் P.ராஜு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அதற்கு பின் அறிமுக உரையாற்றிய BSNL ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா, 9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் நமது கடமைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு சிறப்புரை ஆற்றினார். இவர் தனது சிறப்புரையில், 2வது புத்தாக்க திட்டத்தில் கூறப்பட்டுள்ள தவறன செய்திகள், BSNLன் 4G துவக்கத்திற்கு, அரசாங்கம் உருவாக்கியுள்ள தடைக்கற்கள், தேச்சிய பணமாக்கல் திட்டம் மற்றும் 2வது VRS திட்டம், விதி எண் 56(J) மற்றும் பணி நேரத்தை அதிகரிப்பது ஆகியவற்றின் கீழ் விடுக்கப்படும் மிரட்டல்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். கடந்த 3 ஆண்டு காலத்தில், BSNL ஊழியர் சங்கம் செய்துள்ள சாதனைகள் தொடர்பாகவும், பொதுச்செயலாளர் விவரித்தார்.

அதன் பின், தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கங்கள் சார்பாக மொழியாக்கம் செய்யப்பட்ட மத்திய சங்கத்தின் தேர்தல் பிரச்சார கையேட்டினை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு வெளியிட, உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா பெற்றுக் கொண்டார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இரண்டு சங்கங்களின் விரிவடைந்த மாநில செயற்குழுக்கள் தனித்தனியாக நடைபெற்றன. தமிழ் மாநில தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள் கொண்ட தலைமைக்குழுவின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழுவிற்கான குறிப்பினை அறிமுகம் செய்து வைத்து மாநில செயலாளர் தோழர் P.ராஜு உரை நிகழ்த்தினார். 

பின்னர் பங்கேற்ற தோழர்களின் சார்பாக மாவட்டத்திற்கு ஒரு தோழர் என்ற அடிப்படையில், 17 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். பின்னர் மாநில செயலாளர் தோழர் P.ராஜு தொகுப்புரை வழங்கினார். அதற்கு பின், தோழர் S.செல்லப்பா AGS, எதிர் வரும் 9வது சரிபார்ப்பு தேர்தலில், தமிழ் மாநிலத்திலும், BSNL ஊழியர் சங்கம் முதன்மை சங்கமாக வர, அனைத்து தோழர்களும், தேனீக்களை போன்று உழைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் மாநிலத்தில், இந்த முறை BSNL ஊழியர் சங்கமே முதன்மை சங்கமாக வருவதற்கான பணிகளை சிரமேற்கொண்டு செயல்பட உறுதி பூண்ட, இந்த விரிவடைந்த தமிழ்மாநில செயற்குழுவை, தமிழ் மாநில பொருளாளர் தோழர் S.அஸ்லம் பாஷா நன்றி கூறி நிறைவு செய்தார்.

சேலம் மாவட்டம் சார்பாக, தனி வாகன ஏற்பாடோடு, 22 தோழர்கள் கலந்து கொண்டோம். முதல் தவணை நிதியாக ரூ.5000.00 வழங்கினோம். 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் தமிழ் மாநில சங்கம்