Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 15, 2022

JE இலாகா தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு - நிர்வாகம், மீண்டும் ஊழியர்களை ஏமாற்றுகிறது.


JE இலாகா தேர்வுகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துக் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கையை, 13.06.2022 அன்று DIRECTOR(HR) உடன் நடைபெற்ற அதிகாரபூர்வமான சந்திப்பின் போதும், இந்தக் கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், JE இலாகா தேர்விற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என DIRECTOR (HR) உறுதி அளித்தார். 

(14.06.2022 அன்றைய தேதியில் bsnleu.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது).

அதன் படி, 16.10.2022 அன்று JE இலாகா தேர்வு நடைபெறும் என கார்ப்பரேட் அலுவலகம், 08.07.2022 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும், இதிலும், 15 மாநிலங்களில் மட்டுமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும், 7 மாநிலங்களில், ஒற்றை இலக்கத்திலேயே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஜார்கண்ட் மற்றும் NTR மாநிலங்களில் ஒரு காலிப்பணியிடமும், மத்திய பிரதேச மாநிலத்தில் 2 காலிப்பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

JTO இலாகா தேர்வில் என்ன நடைபெற்றதோ, அதேதான் JE இலாகா தேர்விலும் நடைபெற்றுள்ளது. சீரமைப்பு என்ற பெயரில், பெரும்பாலான JE பதவிகளை, BSNL நிர்வாகம் ஒழித்துக் கட்டியதுதான் காரணம். சீரமைப்பிற்கு முன் 34,646 JE / Draughtsman பதவிகள் இருந்தன. ஆனால் சீரமைப்பின் போது அவை 7,991 ஆக குறைக்கப்பட்டது.

சீரமைப்பின் போதே, BSNL ஊழியர் சங்கம், இதனை எதிர்த்ததோடு, கூடுதலாக JE பதவிகள் இருக்க வேண்டியதற்கான நியாயங்களை எடுத்துரைத்தது. ஆனாலும், நிர்வாகம், அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த சூழலிலும், இந்த பிரச்சனையை, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்துடன் வலுவாக எழுப்பி, JE இலாகா தேர்வு எழுதும் தோழர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர போராடும்.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்  

விவரம் காண இங்கே சொடுக்கவும்