14.06.2022 அன்று காலை, சேலம் GM அலுவலகத்தில் AUAB கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் B. மணிகுமார், மாவட்ட செயலர், AIGETOA தலைமை தாங்கினார். தோழர் K. ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலர், SNEA முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்களையும், மத்திய மாநில AUAB அமைப்பின் முடிவுகளையும் விளக்கி, தோழர் E. கோபால், கன்வீனர், கருத்துரை வழங்கினார்.
AIGETOA சார்பாக தோழர் V. தியாகராஜன், மாவட்ட தலைவர், தோழர் V. அன்பழகன் மாவட்ட பொருளர், தோழர் J. தினகரன் மாநில சங்க நிர்வாகி, SNEA சார்பாக தோழர் V. குருவாயூர் கண்ணன் மாவட்ட தலைவர், AIBSNLEA சார்பாக தோழர் L. வெங்கட்ராகவன் மாவட்ட உதவி செயலர், BSNLEU சார்பாக மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. ராஜன், P. செல்வம், R. ஸ்ரீனிவாசன், R. ராதாகிருஷ்ணன், GM அலுவலக கிளை செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. ட்விட்டர் பிரச்சாரத்தில் அதிகப்படியான ஊழியர்கள் அதிகாரிகள் கலந்து கொள்வதை மாவட்ட செயலர்கள் உத்தரவாதப்படுத்துவது.
2. 21.06.2022 தர்ணா போராட்டத்தை சக்திமிக்கதாக நமது மாவட்டத்தில், சேலம் GM அலுவலகத்தில் நடத்துவது. அதில், அதிகப்படியான ஊழியர்கள் / அதிகாரிகள் கலந்து கொள்வதை மாவட்ட செயலர்கள் உத்தரவாதப்படுத்து.
3. 21.06.2022 தர்ணா போராட்டத்தில் விடுப்பு எடுத்து கலந்து கொள்வது.
4. தர்ணா போராட்டத்திற்கு, ஓய்வூதியர் அமைப்புகள், ஒப்பந்த ஊழியர் அமைப்புகளை அழைப்பது. மத்திய, மாநில, பொது துறை தொழிற்சங்கங்களின் தலைவர்களை வாழ்த்தி பேச அழைப்பது.
5. NUBSNLW (FNTO) சங்கத்தோடு பேசுவது. இயக்கங்களில் பங்குபெறுவதை உறுதிப்படுத்துவது.
6. நமது மாவட்டத்திலுள்ள 4 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டாக சந்தித்து, 30.06.2022க்குள் மகஜர் வழங்குவது. அதை பொது வெளியில் செய்தியாக்குவது.
7. இயக்க செலவுகளை சங்கங்கள் பகிர்ந்து கொள்வது.
8. AUAB SALEM என்கிற வாட்ஸ் ஆப் குழு பிரத்தியேகமாக துவங்குவது.