3வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென, 14.06.2022 அன்று ட்விட்டர் இயக்கம் நடத்திட, AUAB முடிவு செய்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.02.06.2022 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு மற்றும் 10.06.2022 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற, BSNLEU தமிழ் மாநில சங்க சமூக வலைதள & மாவட்ட செயலர்கள் கூட்டங்களில் இது சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நமது தோழர்கள் ட்விட்டர் கணக்கு துவங்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. நமது சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திடுமாறு கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.
ஸ்மார்ட் கைபேசி வைத்துள்ள நமது தோழர்களிடம், ட்விட்டர் கணக்கு இல்லையென்று சொன்னால், அவர்கள், உடனடியாக ட்விட்டர் கணக்கு ஆரம்பிப்பதை, நமது கிளை செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பான உதவிகள் தேவைப்பட்டால், மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.