நமது கண்ணின் மணியாம், BSNL ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் மற்றும் 2022 ஏப்ரல் 2 முதல் 4 வரை கௌஹாத்தியில் நடைபெறவுள்ள நமது சங்கத்தின் 10 வது அகில இந்திய மாநாடு, இரண்டையும் குறிக்கும் வகையில், 22.03.2022 அன்று, கிளைகளில் நமது சங்க கொடியினை ஏற்றி, வாயிற் கூட்டங்களை நடத்த வேண்டும் என நமது மத்திய சங்கம், அறை கூவல் கொடுத்திருந்தது.
அதேபோல் ஒன்றிய அரசின் நாசகர பொருளாதார கொள்கைகளை எதிர்த்து, 2022, மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஊழியர்களை திரட்டுவதற்கும், இந்த வாயிற் கூட்டங்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என நமது சேலம் மாவட்ட சங்கம் முடிவு எடுத்திருந்தது.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 12 கிளைகளிலும், சங்க கொடி ஏற்றப்பட்டு, வாயிற் கூட்டங்கள் நடத்தி, அமைப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வெற்றிகரமாக இயக்கம் நடத்திய கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.