Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 7, 2022

விரிவடைந்த மத்திய செயற்குழு முடிவுகள்


06.02.2022 அன்று, ஒரு வெற்றிகரமான விரிவான மத்திய செயற்குழுவை, BSNL ஊழியர் சங்கம் நடத்தியது. 2022 மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழி முறைகளை திட்டமிட, காணொளி காட்சி மூலமான  இந்த கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்க நிர்வாகிகள், மாநில செயலர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் என மொத்தம் 236 தோழர்கள், இந்தக் கூட்டத்தில் உ ற்சாகமாக பங்கேற்றனர்.

மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, இந்தக் கூட்டம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா தலைமையுரை ஆற்றினார். பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கான அவசியம் தொடர்பாக, பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு உரை நிகழ்த்தினார்.

அதற்கு பின்னர் 49 தோழர்கள், விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களும், பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்கிற நமது சங்கத்தின் முடிவை வரவேற்று பேசினர். பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்கிற உறுதிபாட்டை, விவாதத்தில் பங்கேற்ற ஒவ்வொரு தோழரும் தெரிவித்ததோடு, அதனை அடைவதற்கான மதிப்பு மிக்க ஆலோசனைகளையும் வழங்கினர்.

இறுதியாக, பொதுச்செயலாளர் தொகுப்புரை வழங்கினார். கீழ்கண்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவெடுத்தது.

1. ஒவ்வொரு ஊழியரையும் நேரடியாக சந்தித்து, பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என அவர்களை, ஏற்றுக் கொள்ள செய்வது.

2.  08.02.2022 வாயிற்கூட்டங்களை நடத்துவது.

3. தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக, 10.02.2022 முதல் ஒரு வார காலத்திற்கு கையெழுத்து இயக்கத்தை நடத்துவது- இந்த பிரச்சாரத்தை, பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பயன்படுத்துவது.

4.  11.02.2022 ஹிந்தியில், முகநூல் நேரலை நிகழ்ச்சியை நடத்துவது

5. 12.02.2022 அன்று ஆங்கிலத்தில் முகநூல் நேரலை நிகழ்ச்சியை நடத்துவது.

6. ஒவ்வொரு ஊழியர் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்திற்காக, தலா 5/- ரூபாய் வசூலை வெற்றிகரமாக நிறைவேற்றுவது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்