2022, மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஊழியர்களை திரட்டு வகையில், 08.02.2022 அன்று, வாயிற் கூட்டங்களை நடத்த வேண்டும் என, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த வாயிற் கூட்டங்களில், இந்த பொது வேலை நிறுத்தத்திற்கான, மத்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளையும், BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளையும், விரிவாக விளக்க வேண்டும்.
மத்திய சங்கத்தின் அரைகூவலுக்கினங்க, நமது சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், 08.02.2022 அன்று வாயிற் கூட்டங்கள் நடத்தி ஊழியர்களிடத்தில் வேலை நிறுத்தத்திற்கான ஆதரவை கோருமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். கிளைகளுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளை பயன்படுத்தி இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.