Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 24, 2022

10வது மாவட்ட மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


1. 2022 பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் முழுமையாக கலந்து கொள்வது. 

2. BSNL நிறுவனத்திற்கு நிபந்தனையின்றி, 4G சேவை வழங்க வேண்டும். 

3. தேசிய பணமாக்கல் திட்டம் (NMP) என்ற பெயரில், BSNL நிறுவனத்தின் சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது, OPTIC கேபிள்களை விற்கக்கூடாது.  

4.  ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றம், 1.1.2017 முதல் அமுல்படுத்த  பட வேண்டும்.

5. ஓய்வூதியம், 1.1.2017 முதல் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

6. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கும்,  01.10.2000க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட  ஊழியர்களுக்கும், 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் அமுல்படுத்த பட வேண்டும். 

7. TT / JE / JTO / JAO இலாக்கா போட்டி தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும் 

8. TT / JE / JTO / JAO போட்டி தேர்வுகள் எளிய முறையில் இருக்க வேண்டும்

9. அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், BSNL நிறுவனத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

10. BSNL  டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. 

11. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில், பணி நீக்கம் செய்யக்கூடாது. 

12. BSNL நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் பயன் இல்லாத JOB CONTRACT TENDER முறை, கை விடப்பட வேண்டும். 

13. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். 

14. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை உடனடியாக வழங்க வேண்டும்.

15.  ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF / ESI சமூக பாதுகாப்பு சலுகைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும்.   

16.  ஊழியர்களுக்கு FTTH இணைப்பில் தற்போது வழங்கப்பட்டுள்ள 40% சலுகையை, 60 % ஆக உயர்த்த வேண்டும். 

17. தண்டனை உள்ளிட்ட காரணங்களால் தாமதப்பட்டுள்ள NEPP பதவி உயர்வுகள், விரைந்து தீர்வு காணப்படவேண்டும். 

18. Transmission, BSS, NWOP குழுக்கள் பலப்படுத்தி, சேவை மேம்பாட்டிற்கு வழி வகை செய்ய வேண்டும். 

19. சிம் கார்டு விற்பனையில் காணப்படுகின்ற சிக்கல்கள் தீர்வு காணப்பட்டு, கூடுதல் சிம் கார்டு விற்பனை செய்ய ஆவணம் செய்ய வேண்டும்.

20. அனைத்து தொலைபேசி நிலையங்கள் அலுவலகங்கள் முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும்.

21. அனைத்து அலுவலகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும் 

22. கழிவறைகள் முறையாக பராமரிக்க வேண்டும் 

23.  இலாக்கா வாகனங்களை முறையாக பராமரித்து NETWORK MAINTENANCE பகுதிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி, சேவை மேம்பாட்டிற்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24. சேலத்தில் மீண்டும் CARD REPAIRING CENTRE செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25. இலாக்கா ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், தரமான அடையாள அட்டை (SMART IDENTITY CARD) வழங்க வேண்டும் 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்