Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, December 27, 2021

ரம்மியமான சூழலில் GM அலுவலக 10வது கிளை மாநாடு


27.12.2021, இன்று, சேலம் GM அலுவலக கிளையின் 10வது மாநாடு, ரம்மியமான சூழலில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்ட மாநாட்டு அறை, திடீர் மின் பழுது காரணமாக, மாநாடு நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டது. இருப்பினும், GM அலுவலக கிளை தோழர்கள் உடனடியாக மாற்று இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.  

மாநாட்டிற்கு பொறுப்பு கிளை தலைவர் தோழர் K. சித்திரசேனன் தலைமை தாங்கி, முதல் நிகழ்வாக சங்க கொடியை ஏற்றி வைத்தார். கிளை பொருளர் தோழர் R. முருகேசன்,அஞ்சலியுறை நிகழ்த்த, கிளை செயலர் தோழர் N. பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.  

மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், மாநாட்டை முறைப்படி துவக்கிவைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு பேருரை வழங்கினார்.

பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை,  வரவு செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் N. பாலகுமார், AOS தலைவராகவும், R.  ஸ்ரீனிவாச ராஜு, AOS செயலராகவும், R. முருகேசன், AOS  பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை AIBDPA  மாவட்ட தலைவர் தோழர் M. மதியழகன், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜு, K. ராஜன் மற்றும் P. செல்வம்  ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட தணிக்கையாளர், தோழர் R. ஸ்ரீனிவாசன் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். 

மாநில மாவட்ட மாநாட்டு நிதி ரூ5,000/- வழங்கப்பட்டது. ஏற்கனவே GM அலுவலக கிளை ரூ 20,000/-  வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவையான உணவு அன்பாக பரிமாறப்பட்டது. ப்ளக்ஸ், கொடிகள், ஜண்டாக்கள் என விளம்பரங்கள் சிறப்பாக இருந்தது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்