Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 20, 2021

விவசாயிகளின் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி!!!


மோடி அரசாங்கம் கொண்டு வந்த, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, சம்யுக்த கிஷான் மோர்ச்சா என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்ட பல்வேறு விவசாய சங்கங்கள், தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த ஓராண்டு கால போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

ஆளும் பாஜகவும், RSSம் போராடும் விவசாயிகளை, தேச விரோதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தின. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என அரசாங்கம் கூறி வந்தது. உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில், அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளின் மீது, மத்திய உள்துறையின் ராஜாங்க அமைச்சரின் மகன் வாகனத்தை மோதி நான்கு விவசாயிகளை கொளை செய்தான்.

இந்த போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதியாக நின்ற மத்திய தொழிற்சங்கங்களும், இந்திய உழைப்பாளி வர்க்கமும், இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்தின.

நடைபெற உள்ள உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களில், இந்த விவசாயிகளின் போராட்டம் தங்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஆளும் பாஜக, புரிந்துக் கொண்டது. இந்த பின்னணியில், நேற்றைய தினம் (1911.2021) தொலைக்காட்சியில் தோன்றிய பாரத பிரதமர், நரேந்திர மோடி, வரவுள்ள பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடரில், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும், திரும்ப பெறும் என அறிவித்துள்ளார்.

இது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள, மகத்தான வெற்றி. அதே போல, இந்திய உழைக்கும் மக்களின், ஒன்றுபட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம், மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை பின்னுக்கு தள்ள முடியும் என்பதையும், இந்த வெற்றி பறைசாற்றுகிறது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்