அனைத்து ஊழியர்களுக்கும், ஜூலை மாத ஊதியத்தை உடனே வழங்கு! கேரள மாநில ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியத்தையும், 19.08.2021க்கு முன் வழங்கு! என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம்
ஓணம் திருவிழா காரணமாக, கேரள மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆகஸ்ட் மாத ஊதியத்தை 19.08.2021க்கு முன்னர் வழங்க வேண்டும் என நிதியமைச்சகம் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. ஆனால் BSNLல், ஜூலை மாத ஊதியம் கூட அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தின் உள்ளடக்கத்தை புரிந்துக் கொண்டு, BSNL நிர்வாகம் ஜூலை மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் கேரள மாநிலத்தில் உள்ள BSNL ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியத்தையும், 19.08.2021க்கு முன் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்