BSNLEU, AIBDPA மற்றும் BSNL CCWF சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு, கோரிக்கை சாசனத்தையும், நடவடிக்கை திட்டத்தையும் இறுதிப்படுத்தி உள்ளது.
பணியில் உள்ள, ஓய்வு பெற்ற, தற்காலிக் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளை முன்வைத்து, போராட்டங்களை நடத்துவது என, 2021, ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவு செய்தது. ஹைதராபாத் மத்திய செயற்குழுவின் முடிவினை, 18.08.2021 அன்று நடைபெற்ற BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
கீழ்கண்ட 14 அம்ச கோரிக்கைகளையும், போராட்ட திட்டங்களையும் இறுதி படுத்தியுள்ளது.
கோரிக்கைகள்
1) பொதுத்துறைகளின் தனியார் மயத்தை நிறுத்திடுக!
2) ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளன்று அந்தந்த மாத ஊதியம் வழங்கிடுக!
3) 3வது ஊதிய மாற்றத்தை உடனே இறுதிப்படுத்துக!
4) ஊதிய மாற்ற பிரச்சனையை இணைக்காமல், 15% நிர்ணய பலனோடு ஓய்வூதிய மாற்றத்தை அமலாக்குக!
5) ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை உடனே வழங்குக!
6) நேரடி நியமன ஊழியர்களுக்கு, 30% ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குக!
7) பல்வேறு இலாகா தேர்வுகளை உடனே நடத்துக!
8) ஊதிய தேக்க நிலைக்கு தீர்வு காண, புதிய பதவி உயர்வு கொள்கையை அமலாக்குக!
9) சீரமைப்பு என்ற பெயரில், கேடர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்!
10) பணியில் உள்ள மற்றும் ஓய்வூதியர்களின் தேங்கிக் கிடக்கும் மருத்துவ பில்களை கால தாமதமின்றி தீர்வு காண்க!
11) காசுவல் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதத்தை அமலாக்குக!
12) நேரடி நியமன JEக்கள் மற்றும் இதர ஊழியர்களின் விருப்ப மாற்றலை தீர்வு காண்க!
13) BSNL நிர்வாகக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு E1 ஊதிய விகிதத்தை வழங்கிடுக!
14) பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்திடுக!
போராட்ட வடிவம் மற்றும் தேதிகள்:
I. 14.09.2021 - கிளைகளில் ஆர்ப்பாட்டம்
II. 22.09.2021 - அனைத்து SSA/BA தலைமை அலுவலகங்களை நோக்கி பேரணி
III. 05.10.2021 - மாநில தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்