சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின் கூட்டம், மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் இன்று (22.07.2021) மதியம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. பன்னீர்செல்வம், மாவட்ட செயலர், SEWABSNL தலைமை ஏற்றார்.
கூட்டத்தில், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், AIGETOA மாவட்ட செயலர் தோழர் B. மணிகுமார், SNEA சார்பாக தோழர் R. ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். AIBSNLEA சங்கம் சார்பாக கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் கூட்டத்தின் முடிவுகளுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக அனைத்து சங்க முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
வருகிற 28.07.2021 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் சம்மந்தமாக ஆழமாக விவாதிக்கப்பட்டது. நமது சேலம் மாவட்டத்தில் இயக்கத்தை வெற்றி பெற செய்ய கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. உண்ணாவிரத போராட்டத்தை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடத்துவது.
2. சேலம் மாவட்ட AUAB சார்பாக, நோட்டீஸ் வெளியிடுவது, FLEX விளம்பரம் வைப்பது.
3. சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள். 28.07.2021 அன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்வது. அவரவர் சார்பு சங்கங்கள் தோழர்களின் பங்கேற்பை உறுதி செய்வது.
4. AUAB தமிழ் மாநில கூட்டமைப்பு அறைகூவலுக்கிணங்க, 28.07.2021 அன்று மதியம் 12.30 மணி அளவில், செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்துவது.
5. பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 1,000 நோட்டீசுகள் அச்சிடுவது, இயக்கம் நடைபெறும் போது, அவற்றை விநியோகிப்பது.
6. ஓய்வு பெற்ற தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அமைப்புகளின் ஆதரவை கோருவது, அவர்களை கூட்டத்தில் பங்கேற்க செய்வது.
7. காப்பீடு, வங்கி, இரும்பாலை உள்ளிட்ட சகோதர, தோழமை சங்கங்களின் ஆதரவை கோருவது, அவர்களை இயக்கத்தில் வாழ்த்தி பேச அழைப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. இறுதியாக தோழர் B. மணிகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.