Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, May 16, 2021

மருத்துவ காப்பீட்டு திட்டம்! - CMD BSNLக்கு BSNLEU கடிதம்!!


மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என பல தோழர்கள், BSNLEU மத்திய சங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் கீழ்கண்ட ஆலோசனைகளோடு, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது:-

1) தற்போதுள்ள BSNL MRS திட்டத்தோடு, விருப்பம் உள்ள ஊழியர்கள், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம்.

2) நிறுவனத்தின் நிதி நிலை மேம்பாடு அடையும் வரை, இந்த திட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாக இருக்கும்.

3) இந்த திட்டத்தில் வசதி செய்து கொடுப்பவராக BSNL நிறுவனம் இருக்க வேண்டும். GTI திட்டத்தில் செய்வதை போன்று, இந்த திட்டத்திலும் நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, தவணை தொகையை பிடித்தம் செய்து, காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

சரியான ப்ரீமியம் தொகையில், ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, ஊழியர்கள் பெறுவதற்கு, மேலே கூறப்பட்டுள்ள இந்த ஏற்பாடு, நிச்சயம் உதவி செய்யும் என நம்புகிறோம்.

தோழமையுடன், 
E. கோபால்,
 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்