Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, March 17, 2021

இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கூடாது என BSNLEU கடிதம்



இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு, ஒரு ஆலோசனையை முன்வைத்து, இதன் மீதான தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு, அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலர்களுக்கும், நேற்று (16.03.2021), கடிதம் எழுதியது.  

ஒரு NON EXECUTIVE பதவியிலிருந்து மற்றொரு NON EXECUTIVE பதவிகளுக்கான தேர்வுகளை ONLINE மூலம் நடத்தக்கூடாது என்கிற உறுதியான நிலைபாட்டை, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது. காரணம் , கீழ் மட்டத்தில் உள்ள பல ஊழியர்களுக்கு கணிணியுடன் பணி புரிய முறையான வாய்ப்பு ஏதும் கிடைப்பது இல்லை. போதுமான பயிற்சியும் வழங்கப்படவில்லை. 

எனவே TT, JE உள்ளிட்ட இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்துவது ஏற்புடையது அல்ல என இன்று (17.03.2021) நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம்.

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

மத்திய சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும்