IDA பட்டுவாடாவில், நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க தொலை தொடர்பு துறையின் செயலருக்கு, DPE கடிதம்
01.10.2020 முதல் வழங்க வேண்டிய 5.5% IDA வை வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. BSNL ஊழியர் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன், இந்த நீதிமன்ற தீர்ப்பை அமலாக்கும் வகையில், IDA விற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என DPE செயலருக்கு, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை தொலை தொடர்பு துறையின் செயலருக்கு, DPE செயலர் அனுப்பி, அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.