ஊழியர்களுக்கு இரண்டு தவணை IDAக்களை வழங்குவது தொடர்பாக கனரக தொழிற்சாலை அமைச்சர், திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
ஊதிய முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது என பொதுத்துறைகளுக்கான இலாகா DPE தொடர்ச்சியாக விளக்கமளித்து வருகிறது. ஆனால், அதே சமயம், இரண்டு தவணை IDAக்களை வழங்குவதற்கான உத்தரவுகளை DPE இன்னமும் வழங்கவில்லை. கேரள உயர்நீதி மன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை விரைவில் வர உள்ளது.
இதற்கிடையில், ஊழியர்களுக்கு இரண்டு தவணை IDAக்களுக்கான உத்தரவை DPE விரைவில் வெளியிடுவதை உறுதி செய்யும் வகையில், இந்த பிரச்சனையில், தலையிட வேண்டும் என மத்திய கனரக தொழிற்சாலைகளுக்கான இலாகாவிற்கான அமைச்சர், திரு பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்