உரிய தேதியில் ஊதியத்தை வழங்காமல் BSNL நிர்வாகம், ஊழியர்களின் வயிற்றில் அடித்து வருகிறது. இதனை அனுமதிக்கக் கூடாது. எனவே, நாளைய தினம் (05.02.2021) மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு, BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் ஊதியம் வழங்க நிர்வாகத்தை நிர்பந்தம் செய்யும் வகையில், மேலும் வலுவான இயக்கங்களை நடத்திட திட்டமிட்டுள்ளது.
எனவே, அதிக பட்ச ஊழியர்களை திரட்டி, 05.02.2021 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட, BSNL ஊழியர் சங்கம், கிளை மாவட்ட சங்கங்களை கேட்டுக் கொள்கிறது.