ஊழியர்களுக்கு IDA வழங்கப்பட வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தொலை தொடர்பு துறையின் செயலருக்கு DPE வழிக்காட்டுதல்
இரண்டு தவணை IDAக்கள், தவறுதலாக BSNL ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு உடனடியாக IDA வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதே சமயம், DPE செயலருக்கும், கனரக தொழிற்சாலை அமைச்சருக்கும், BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து கடிதம் எழுதி வந்துக் கொண்டுள்ளது.
தற்போது, 04.01.2021 மற்றும் 15.01.2021 ஆகிய தேதிகளில், BSNL ஊழியர் சங்கம் கொடுத்த கடிதங்களை இணைத்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழிகாட்டி தொலை தொடர்பு துறையின் செயலர் திரு அன்ஷூ பிரகாஷ் அவர்களுக்கு DPE 04.02.2021 தேதியிட்ட தனது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்