தனியார்மயமாக்கலை எதிர்த்து 2021, மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியில் உள்ள ஒன்பது தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான UFBU, 2021 மார் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தனது நிதி நிலை அறிக்கையில் தெரிவித்த்துள்ளார். பாஜக அரசாங்கம் ஏற்கனவே IDBI வங்கியை விற்று விட்டது. LICயை தனியார் மயமாக்குவது, காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74%ஆக உயர்த்துவது, BAD BANK என்ற பெயரில் ஒரு வங்கியை உருவாக்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
தனியார் மயமாக்கலுக்கு எதிரான UFBUவின் போராட்டங்களுக்கு BSNL ஊழியர் சங்கம், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்