மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கு நேற்று (08.01.2021) விசாரணைக்கு வந்தது. அடுத்த வாரத்தில், நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பதே நமது உறுதியான நம்பிக்கை. ஏற்கனவே பொதுத்துறை ஊழியர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை கேரள மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்கள் வழங்கியிருந்தன. அத்துடன், ஏற்கனவே வரவேண்டிய இரண்டு தவணை IDAக்களுக்கான உத்தரவை வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், DPEயின் செயலருக்கு ஒரு வலுவான கடிதத்தையும் எழுதியிருந்தது.
இந்த சூழ்நிலையில், மூன்று தவணை IDA முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது என நேற்று (08.01.2021) DPE ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. சட்டபூர்வமான அழுத்தத்தின் காரணமாகவே, DPE இந்த கடிதத்தை எழுதியுள்ளது என்பது உறுதி. இந்த கடிதம் வெளியாவதற்கு, DPEயை நிர்பந்தம் செய்வதில் BSNL ஊழியர் சங்கமும் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளதற்கு நாம் பெருமிதம் கொள்வோம்.
ஆகவே, 01.10.2020 முதல் 5.5% IDAவும், 01.01.2021 முதல் 6.1% IDAவும் கூடுதலாகவும் ஊழியர்களுக்கு கிடைக்கும். (மொத்தம் 11.6% IDA) . BSNL ஊழியர் சங்கம் எடுத்த முயற்சிக்கு இது ஒரு மகத்தான வெற்றி. இதனை அனுபவிக்க உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்