BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, ஊழியர்களுக்கு GTI திட்டத்தை அமலாக்கும் நடவடிக்கைகளை, நிர்வாகம் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, LICயின் முன்மொழிவுகளை, தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை கேட்டுக் கொண்டு நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
LICயின் முன்மொழிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.
1) முதிர்வு தொகை 20 லட்ச ரூபாய்.
2) 18 முதல் 50 வயது வரை உள்ள ஊழியர்களுக்கு, வருடாந்திர ப்ரீமியக் கட்டணம், 1000 ரூபாய்களுக்கு, ரூ.1.80 + GST. இது ஆண்டொன்றுக்கு ரூ.3,600/-+ GST.
3) 51 முதல் 59 வயது வரை உள்ள ஊழியர்களுக்கு, வருடாந்திர ப்ரீமியம் தொகை ஆயிரம் ரூபாய்களுக்கு ரூ.7.70+ GST. இது ஆண்டொன்றுக்கு 15,400/-+ GST.
4) குறைந்த பட்சம் 70% ஊழியர்கள் இதில் இணைந்தால் மட்டுமே, இது அவர்களுக்கு சாத்தியமாகும் என LIC தெரிவித்துள்ளது.
LICயின் கடிதம் மீதான தங்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.