தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU சங்கம் ஆகியவற்றின் இணைந்த அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக 30.09.2020 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகளின் மீது மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. BSNLஐ பாதுகாக்க பாடுபடும் தொழிலாளர்களை பழி வாங்கும் இந்த கொடுமையான நடவடிக்கைகளை எதிர்த்து மூன்று கட்ட இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவு எடுத்தது.
கோரிக்கைகள்
1. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்யும் முடிவை கைவிடு!
2. பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஒப்பந்த ஊழியர் ஊதியத்தை உடனடியாக வழங்கிடு!
3. நிரந்தர ஊழியர்களுக்கு வேலை பளுவை மேலும் திணிக்காதே! தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்காதே!
4. BSNL சேவைகளை சீரழிக்காதே! தனியார் நிறுவனங்களுக்கு துணை போகாதே!
5. உதவாக்கரை OUTSOURCING ஒப்பந்தங்களை ரத்து செய்து மீண்டும் WORKERS CONTRACT முறையை அமுல்படுத்து! அதுவரை OUTSOURCING ல் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF மற்றும் ESI திட்டங்கள் அமுல்படுத்துவதை உறுதி செய்!
6. BSNL நிறுவனத்திற்காக உயிர் நீத்த நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சட்ட பூர்வமான இழப்பீட்டு தொகையை உறுதி செய்திடு!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெறவுள்ள இயக்கங்களை நமது மாவட்டத்தில் அமுல்படுத்துவது சம்மந்தமாக விவாதிக்க, BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்களின் மைய கூட்டம், 01.10.2020 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் நமது மாவட்ட சூழலுக்கேற்ப அந்த இயக்கங்களை கீழ்கண்ட வகையில் நடத்த இரண்டு மாவட்ட சங்கங்களின் இணைந்த மைய கூட்டம் முடிவு எடுத்தது. அதன்படி,
05.10.2020 - ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
06.10.2020 - சேலம் நகர கிளைகள் சார்பாக GM அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம். அன்றே GM அவர்களை சந்தித்து, கோரிக்கை மகஜர் வழங்குதல்
07.10.2020 - இரண்டு சங்க மாநில நிர்வாகிகள் சென்னை CGMT அலுவலகம் முன்பு நடைபெறும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது
08.10.2020 - தனி வாகனத்தில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு சென்னை CGMT அலுவலகம் முன்பு நடைபெறும் பெருந்திரள் முற்றுகையில், TNTCWU சார்பாக 20 தோழர்கள், BSNLEU சார்பாக 10 தோழர்கள் கலந்து கொள்வது
அருமை தோழர்களே! கொரானா தொற்று ஆபத்தை விட கொடுமையான நோய் நம்மை தாக்குவதை தடுப்பதற்கு, தொடர் போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை உணர்ந்து மேற்சொன்ன முடிவுகளை, கிளைகள் கறாராக அமுல்படுத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,
E. கோபால்,
மாவட்ட செயலர் BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர் TNTCWU