Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, October 3, 2020

கருப்பு தின உண்ணாவிரத போராட்டம்


AUAB மத்திய கூட்டமைப்பின் அறைகூவல்படி, சேலம் மாவட்ட AUAB சார்பாக, 01.10.2020 அன்று சேலம் GM அலுவலகத்தில்,உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), P.பொன்ராஜ் (SNEA) கூட்டு தலைமை தங்கினார்கள். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். SNEA மாநில உதவி தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர்,சேலம் மாவட்ட செயலர் தோழர் P. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

SNEA மாவட்ட செயலர் தோழர் G. சேகர், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், ஆகியோர் கண்டன பேருரை வழங்கினார்கள். 

BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் K. ராஜன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சமூக இடைவெளியுடன் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள், BSNL நிறுவனத்திற்கு 4G வேண்டும் என்ற முத்திரை பதித்த முகக்கவசத்தை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. போராட்ட கோசத்தை அச்சடித்து சிறப்பு முகக்கவசத்தை மாவட்ட சங்கம் பிரத்தியேகமாக தரவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு வழங்கியது.

தோழமையுடன்,

E. கோபால்,

மாவட்ட செயலர்