29.07.2020, புதன், காலை 10.30 மணி முதல், தொலைபேசி நிலையம், ராசிபுரம்
BSNLEU ராசிபுரம் கிளை செயலர் அருமை தோழர் P .M .ராஜேந்திரன், வருகிற 31.07.2020 அன்று இலாக்கா பணி நிறைவு செய்கிறார். 1983ல் காசுவல் மஸ்தூராக இலாக்கா பணியை துவங்கிய காலம் தொட்டு, KG போஸ் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு, பல்வேறு இயக்கங்கள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என அனைத்திலும் முன்னணி பங்கு வகித்தவர். சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து, 1993ல் நிரந்தர ஊழியரானார்.
அன்று முதல் E4, ITEU, BSNLEU என அனைத்து சங்கங்களிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஒப்பந்த ஊழியர்களுக்காக நடைபெறும் அனைத்து இயக்கங்களிலும் முழுமையாக கலந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், ஒப்பந்த ஊழியர்களுக்கு பல உதவிகள் புரிந்தது தோழரின் வர்க குணாம்சத்துக்கு எடுத்துக்காட்டு.
PMR என்று அன்பாக அழைக்கப்படும் அருமை தோழர் ராஜேந்திரனுக்கு, 29.07.2020 அன்று ராசிபுரம் தொலைபேசி நிலையத்தில், பணி நிறைவு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு துவங்கும் விழா சமூக இடைவெளியுடன், நடத்தப்படுகிறது. மதிய உணவுடன் விழா நிறைவு பெறும்.
37 ஆண்டுகள் நம் அமைப்போடு இணைந்து, கள பணியாற்றிய நம் தோழனை கௌரவப்படுத்த, நாம் 29.07.2020, புதன்கிழமை அன்று ராசிபுரத்தில் கூடுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்