Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 13, 2020

BSNL நிறுவனத்திற்கு 4G சேவை வேண்டும்

₹10 ஆயிரம் கொரோனா நிவாரணம் கேட்டு ...
16.07.2020 அன்று கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தையும், கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டத்தையும் வெற்றிகரமாக்குவோம்!

4G சேவை உடனடியாக வழங்க வேண்டும், BSNLன் புத்தாக்க திட்டங்கள் உடனடியாக அமலாக்க வேண்டும், மற்றும் ஊழியர்களின் முக்கிய பிரச்சனைகள் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது போராட்ட இயக்கங்களை நடத்திட 06.07.2020 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம். 

அதன் படி 16.07.2020 அன்று மதிய உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அத்துடன் அந்த நாள் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து கொள்ள வேண்டும். 

10.07.2020 அன்று அனைத்து சங்க தலைவர்களும், கூட்டாக போராட்ட அறிவிப்பை நிர்வாகத்திடம் வழங்கினர். 11.07.2020 அன்று தமிழ் மாநில சங்க தலைவர்களும் கூட்டாக பிரகடனம் வெளியிட்டுள்ளனர். நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்த பட வேண்டும். 

சேலம் நகர கிளைகள் சார்பாக, 16.07.2020 அன்று மதியம் 12.30 மணி அளவில், சேலம் GM அலுவலகத்தில் போராட்டம் நடைபெறும். 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU 
மத்திய சங்கங்களின் கூட்டு போராட்ட அறிவிப்பு காண இங்கே சொடுக்கவும் 
மாநில சங்கங்களின் அறிவிப்பு காண இங்கே சொடுக்கவும்