Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 19, 2020

DIRECTOR(HR) வுடன் முறையான சந்திப்பு


BSNL ஊழியர் சங்கம் மற்றும் DIRECTOR(HR) இடையே 14.01.2020 அன்று நடைபெற்ற முறையான சந்திப்பு 


நமது சங்கம் கொடுத்த ஆய்படு பொருட்கள் மீது விவாதிக்க, BSNL ஊழியர் சங்கம் மற்றும் DIRECTOR(HR) ஆகியோருக்கு இடையேயான ஒரு முறையான சந்திப்பு 14.01.2020 அன்று நடைபெற்றது. 

நமது சங்கம் சார்பாக, அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி, ஆகியோரும் நிர்வாக தரப்பில், மனித வள இயக்குனர் திரு. அரவிந்த் வட்னிர்கர்,  திரு. சரூப் தியாகி Sr.GM(Estt.), திரு. A .M .குப்தா GM(SR), திரு. மனிஷ் குமார் GM(Restg.) திரு. ஜகதீஷ் குமார் CLO, ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மனிதவள இயக்குனர் சாதகாமாக பதிலளித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவருக்கும், இதர அதிகாரிகளுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது. 

அந்தக் கூட்டம் தொடர்பான சில செய்திகளின் தமிழாக்கத்தை காண கீழே சொடுக்கவும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரங்கள் காண இங்கே சொடுக்கவும்