விருப்ப ஓய்வு திட்டத்திற்கு 78,569 ஊழியர்கள்/அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்ததின் அடிப்படையில், விருப்பம் கொடுப்பதற்கான சாளரம் 04.11.2019 அன்று துவங்கப்பட்டது. 03.12.2019 மாலை மூடப்பட்டது. மொத்தம் 78,569 ஊழியர்களும், அதிகாரிகளும் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
VRS-2019ன் படி 1,04,471 ஊழியர்கள் இந்த திட்டத்தின் படி விருப்பம் தெரிவிக்க தகுதியுடையவர்கள். தகுதியுள்ளவர்களில் 75.2% ஊழியர்கள் விருப்பம் கொடுத்துள்ளார்கள்.
அதே போல 5,237 ஊழியர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு பின் விருப்ப மனுவை திரும்ப பெற்றுள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்