Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 5, 2019

ஊதியம் வழங்கக்கோரி மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்


அக்டோபர், நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய வலியுறுத்தி, 04.12.2019 அன்று நாடு முழுவதும், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, AUAB சார்பாக, அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நமது மாவட்டத்தில், 04.12.2019 அன்று சேலம் PGM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

போராட்டத்திற்கு தோழர்கள் S . ஹரிஹரன், (BSNLEU), R . மனோகரன் (SNEA), V. சண்முகசுந்தரம்(AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர் . BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S .தமிழ்மணி போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் வாழ்த்துரை வழங்கினார். 

NUBSNLW (FNTO) மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன், SNEA மாவட்ட செயலர் தோழர் G. சேகர், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

SNEA மாவட்ட பொருளர் தோழர் பொன்ராஜ் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். DGM(HR/ADMN), AGM(HR/ADMN) உள்ளிட்ட உயர்அதிகாரிகள், பெண் தோழர்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர்