விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள்வர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து புத்திசாலித்தனமான முடிவை மேற்கொள்ளவும்
VRS சாளரம் 03.12.2019 அன்று மூடப்படும். அதற்கு தற்போது ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளது. விருப்ப ஓய்வு திட்டம்-2019ல் உறுதி செய்யப்படாமல் உள்ள சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண BSNL நிர்வாகமோ, DoTயோ முன்வரவில்லை. எனவே ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் முன் வைத்திருந்த கீழ்கண்ட பாதுகாப்புகளை, BSNL நிர்வாகமோ DoTயோ உறுதி செய்ய போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.
1) ஓய்வூதிய COMMUTATION:-
விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல உள்ள தொழிலாளர்களுக்கு. பாதுகாப்பை உறுதி செய்ய PENSION COMMUTATION RULE 1981ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள PENSION COMMUTAION RULE 1981ன் படி ஒரு தொழிலாளி, தான் பணி ஓய்வு பெற்று, ஒரு வருட காலத்திற்குள் ஓய்வூதிய COMMUTATIONக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். VRS-2019ன் படி, VRSக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, அவர் 60 வயதை பூர்த்தி செய்தவுடன் தான் ஓய்வூதிய COMMUTATION வழங்கப்படும்.
தற்போதுள்ள விதிகளின் படி, VRSல் சென்ற ஒரு வருட காலத்திற்கு பின் ஓய்வூதிய COMMUTATIONக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அது பெரும்பான்மையான ஊழியர்களுக்கு, தேவையற்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்கும்.
மேலும் VRSக்கு விருப்பம் தெரிவித்த ஒருவர், தான் 60 வயதை அடைவதற்கு முன் இறந்து விட்டார் என்றால், அவரது குடும்பத்தாருக்கு ஓய்வூதிய COMMUTATION பலன் கிடைக்காது. அது அந்த குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். இது தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள். மேலே உள்ளவற்றில் VRSக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு ஒரு கட்ட விலக்கு அளிக்க வேண்டும் என ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன்களுக்கான துறை, COMMUTATION OF PENSION RULES-1981ல் திருத்தங்களை கொண்டு வந்தார்கள் என்றால் தான் மேற்கண்ட விலக்குகளை நம்மால் பெற முடியும். BSNL நிர்வாகமோ, DoTயோ கொடுக்கும் வாய்மொழி அல்லது எழுத்து பூர்வமான உறுதிமொழிகள் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்காது. எனினும், இந்த பிரச்சனைகளில் VRSக்கு விருப்பம் கொடுத்தவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு BSNL நிர்வாகமோ, DoTயோ எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
2) மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான தகுதி:-
பிற்காலத்தில் முன் தேதியிட்டு வழங்கப்படும் ஊதியமாற்றத்திற்கு VRSல் சென்ற ஊழியர், தகுதியானவர் அல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. VRS-2019ல் உள்ள விதிகளின் படியே கூட, VRSல் செல்லும் ஊழியர்கள் மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர்கள் அல்ல. VRS-2019ல் உள்ள 8(viii) பாரா கீழ்கண்டவாறு கூறுகிறது:-
”இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்கள் முழுமையானதும், இந்த திட்டத்தின் கீழ் வருகிறதோ இல்லையோ, என்ன தன்மையில் இருந்தாலும், அனைத்து உரிமை கோரிக்கைகளுக்கும் இறுதியானதும் ஆகும்”
VRSல் செல்பவர்களுக்கு வழங்கப்படும் EXGRATIA என்பதுதான் முழுமையானதும் மற்றும் இறுதியானதுமாகும். அதற்கு பின் முன் தேதியிட்டு அமலாக்கப்பட்டாலும், 3வது ஊதிய மாற்றத்திற்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதே இதன் பொருள்.
VRSக்கு விருப்பம் கொடுத்துள்ள ஊழியர்களையும், 3வது ஊதிய மாற்றத்திற்கு தகுதியுள்ளவர்களாக மாற்றுவதற்கான உறுதி மொழியை BSNL நிர்வாகம் வழங்க வேண்டும் என்பது ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கோரிக்கை. ஆனால் இந்த உறுதி மொழியை வழங்குவதற்கு BSNL நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. VRSக்கு விருப்பம் தெரிவித்தவரக்ளுக்கு 3வது ஊதிய மாற்ற பலன் கிடைக்காது என்பதை இந்த செயல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.
மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், VRSக்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்த ஊழியர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து 03.12.2019 அன்று VRS சாளரம் மூடும் முன்னர் புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள் என நமது மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைதளம்