சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு, 05.11.2019 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில், சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, சங்க கொடியை TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் பலமான கோஷங்களுக்கு மத்தியில் ஏற்றி வைத்தார்.
செயற்குழு கூட்டத்திற்கு, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் M . சக்திவேல், மாவட்ட அமைப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் விளக்கவுரை வழங்கினார். தமிழ் மாநில பொறுப்பு செயலர் தோழர் சுப்பிரமணியம் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், 8வது சரிபார்ப்பு தேர்தல் வெற்றி, BSNL புத்தாக்கம், விருப்பு ஓய்வு திட்டம், ஒப்பந்த ஊழியர் சம்பள விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
8வது சரிபார்ப்பு தேர்தல் வெற்றிக்கு கள பணியாற்றிய மாவட்ட செயற்குழு தோழர்களை மாநில உதவி தலைவரும், பொறுப்பு மாநில செயலரும் கௌரவப்படுத்தினர். சமீபத்தில் ஓய்வு பெற்ற தோழர்களையும் கௌரவப்படுத்தினர். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், வாழ்த்துரை வழங்கினார்.
மதிய உணவு இடைவேளைக்கு பின், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மாவட்ட உதவி தலைவர் தோழர் M . விஜயன் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். சிறப்பான ஏற்பாடுகள் செய்த, செவ்வை, STR மற்றும் TNTCWU கிளைகளை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்