ஓய்வு பெறும் வயது 60லிருந்து 58ஆக குறைக்கப்படும் என்ற மிரட்டல் பல ஊழியர்கள், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வதந்தியை பரப்புபவர்கள், இந்த விஷயத்தில் அதிகப்படியான நேரத்தை செலவழித்து, விருப்ப ஓய்வு திட்டத்திற்கு அதிகப்படியான ஊழியர்களை விருப்பம் தெரிவிக்க நிர்ப்பந்தம் கொடுத்திருந்தனர்.
ஆனால், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் அவர்கள் 27.11.2019 அன்று பாராளுமன்றத்தில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கொடுத்த இந்த பதிலானது, விஷமிகள் பரப்பிய பெரிய அளவிலான பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
BSNLல் உள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது என்பது அரசாங்க விதிகளின் படியே இருக்கும் என BSNL நிர்வாகம், 02.01.2001 தேதியிட்ட தனது கடித எண் BSNL/4/SR/2000 மூலம் உறுதி அளித்திருந்ததை BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, 25.11.2019 அன்று மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சர், திரு அனுராக் சிங் தாகூர் அவர்கள் பாராளுமன்றத்தில் , 33 வருட சேவை அல்லது 60 வயது, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அப்போது ஓய்வு என்கிற முன்மொழிவு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என அறிவித்துள்ளார்.
எனவே, ஓய்வு பெறும் வயது குறைக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள ஊழியர்கள், தாராளமாக தற்போது தங்களின் விருப்ப மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பாராளுமன்ற கேள்வி / பதில் காண இங்கே சொடுக்கவும்
தகவல்: மத்திய சங்க வலைத்தளம்