16.09.2019 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற 8வது சங்க அங்கீகார தேர்தலில், நமது BSNLEU சங்கம் தொடர் 7வது வெற்றியை பெற்றதை தொடர்ந்து, இன்று, 24.09.2019 நமது BSNLEU பேரியக்கத்தை அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட உத்தரவின்படி:
01. அகில இந்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் BSNLEU மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கம். NFTEBSNL இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தான்.
02. அங்கீகார காலம் 24.09.2019 முதல் 23.09.2022 வரை ( 3 ஆண்டுகள்)
03. கவுன்சில்களில் BSNLEU சங்கத்திற்கு 8 இடங்கள். NFTEBSNL சங்கத்திற்கு 6 இடங்கள் தான்.மற்றவர்களுக்கு இடமில்லை.
04. கவுன்சில் செயலராக BSNLEU பிரிதிநிதி தான் இருப்பார். அதாவது அஜெண்டா செயலரால் தான் வழங்க முடியும்.
05. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த, ஒப்பந்தங்கள் செய்து கொள்ள, கருத்து கூற இரண்டு சங்கங்களுக்கு மட்டும் தான் அங்கீகாரம்.
06. 2 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதால் FNTO மற்றும் BTEU சங்கங்கள் குறைந்தபட்ச தொழிற்சங்க சலுகைகள் பெற தகுதி பெற்றுள்ளனர்.
தோழமை வாழ்த்துக்களுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
அங்கீகார உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
தொழிற்சங்க வசதிகள் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
கவுன்சில் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சேலம் மாவட்ட சங்க நன்றி அறிவிப்பு நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம் காண இங்கே சொடுக்கவும்