01.08.2019 அன்று டில்லியில் AUAB கூட்டமைப்பின் கூட்டம் NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S . சிவகுமார், பொது செயலர், AIBSNLEA தலைமை தாங்கினார். கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNLMS, BSNLATM, TEPU மற்றும் AIBSNLOA சங்க தலைவர்கள்/பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.
BSNL புத்தாக்கம் சம்மந்தமான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாத நிலையை கூட்டம் கவலையோடு பரிசீலித்தது. முதலீட்டு செலவுகள் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை பற்றி கூட்டம் ஆழமாக விவாதித்தது. சட்ட பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கூட அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வதை BSNL விலக்கி கொள்ள வேண்டும் என கூட்டம் கருதியது. அதனடிப்படையில், கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 07.08.2019 அன்று நாடு முழுவதும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த AUAB அறைகூவல் கொடுத்துள்ளது.
1) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு, 2000-மாவது ஆண்டில் மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்று.
அ) சேவைகளை பராமரிக்க தேவையான உதவிகளை உடனடியாக BSNLக்கு வழங்கு
ஆ) தனது முதலீட்டு செலவுகளுக்காக BSNL நிறுவனத்திற்கு மென் கடன் வழங்கு.
2) முதலீட்டு செலவினங்களுக்கு BSNL நிறுவனம் விதித்துள்ள ஒட்டு மொத்த தடையை நீக்கு. வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ள இடங்களில் முதலீட்டு செலவினங்களை செய்ய தலமட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி கொடு.
3) ஆட்குறைப்பை செய்யாதே. BSNL உருவாகும் போது பணிப்பாதுகாப்பு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று.
4) சட்ட பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கூட அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிடு.
நமது சேலம் மாவட்டத்தில், 07.08.2019 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் மாவட்ட AUAB தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. சேலம் நகர கிளைகள் சார்பாக, 07.08.2019 அன்று மதியம் 12.30 மணி அளவில், PGM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தை சக்திமிக்கதாக நடத்துவோம்...கோரிக்கைகளில் வெற்றிபெறுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU