Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, July 26, 2019

கிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்


நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 23.07.2019 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், அஞ்சலியுறை வழங்கினார். மற்றுமொரு மாவட்ட உதவி செயலர் தோழர் S . ராமசாமி, வரவேற்புரை வழங்கினார். 

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நிதி நிலவரத்தை எடுத்துரைத்தார். 

பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதிலுரை வழங்கினார். 

9வது மாவட்ட மாநாடு, 8வது சரிபார்ப்பு தேர்தல், ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சனைகள், மத்திய மாநில சங்க விரிவடைந்த செயற்குழுக்கள் மீது முடிவுகள் எடுக்கப்பட்டது. மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R . முருகேசன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்