29.7.2019 அன்று விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரில் மிகுந்த எழுச்சியுடன் துவங்கியது. மகாராஷ்டிரா மாநில செயலாளர் மற்றும் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் நலவடே தேசீய கொடியையும், ஆந்திர மாநில செயலாளர் மற்றும் அகில இந்திய உதவி செயலாளர் தோழர் சம்பத்ராவ் சங்க கொடியையும் ஏற்றினர்.
அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா தலைமையேற்க, அகில இந்திய துணைப் பொது செயலாளர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் நம் முன் உள்ள கடமைகள் குறித்து பொது செயலாளர் தோழர் P . அபிமன்யூ அறிமுக உரையாற்றினார்.
புனே PGM திரு. அரவிந்த் வட்நேர்கர் நம்பிக்கை அளிக்கும் விதமாக உரையாற்றினார். அவர் விரைவில் மனித வள இயக்குனராக [Director (HR)], ஆக பொறுப்பேற்க உள்ளார். மாவட்ட செயலாளர்களின் விவாதம் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்