ஊழலின் ஒட்டு மொத்த அடையாளமாக சென்னை கூட்டுறவு சங்கம் மாறியுள்ளது. பல மாதங்களாக தனி நபர்க்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குகளை முழுமை செய்து அவர்களது கணக்கில் சேரவேண்டிய பணம் செலுத்துவதில்லை. ஒரு பகுதி நிலம் விற்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
இப்படி பட்ட அவலங்களை கண்டித்து, BSNLEU தமிழ் மாநில சங்கம், 09.05.2019 அன்று கூட்டுறவு சங்க கிளைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது. அதன்படி, 09.05.2019, வியாழன், காலை 10.30 மணி அளவில் சேலம் சின்ன திருப்பதி சொசைட்டி கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தவுள்ளோம். அநீதி கண்டு வெகுன்டெழந்து ஆர்பரித்து போராடுவோம்.
வாருங்கள் தோழர்களே!
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்