சேலம் மாவட்ட சங்கத்தின் மைய கூட்டம் நேற்று (06/05/2019) மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. ஐந்து மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து, ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, பெருந்திரள் முறையீடாக, 08/05/2019 அன்று PGM யிடம் கோரிக்கை மனு கொடுப்பது.
2. 09/05/2019 அன்று சொசைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சேலம் சொசைட்டி கிளை முன்பு, தர்மபுரி தோழர்களோடு சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆர்ப்பாட்டத்தில் நமது மாவட்டத்திலிருந்து திரளான தோழர்கள் பங்கேற்பது.
3. 13,14 & 15/05/2019 தேதிகளில் CGM அலுவலகத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மாநில சங்க நிர்வாகிகள் மூன்று நாட்களும் போராட்டத்தில் கலந்து கொள்வது.
4. 15/05/2019 அன்று தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான தோழர்கள் CGM அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது என்கிற வகையில் நமது மாவட்டத்தில் அந்தந்த கிளைகளில் BSNLEU & TNTCWU இணைந்து அதிகப்படியான தோழர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
மாவட்ட சங்க முடிவுகளை அமுல் படுத்திடுவோம்.
களம் காணுவோம். வெற்றி பெறுவோம்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்