Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 19, 2019

நெருக்கடியை சமாளித்து முன்னேற பிஎஸ்என்எல் திட்டம்




அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நிதி நெருக்கடியைச் சமாளித்து தொடர்ந்து இயங்க ரூ.5,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், மோடி அரசின் வஞ்சகத்தால் கடுமையான நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது. இந்திய நெட்வொர்க் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகிலிருந்தே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி மோடி அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இயங்குவதற்காக வங்கிகளிடம் ரூ.5,000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து கிடைத்துள்ளது.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலதனச் செலவுகளைச் சமாளிக்க மட்டுமே கடன் வாங்கிக்கொள்ளத் தொலைத் தொடர்புத் துறை இதுவரையில் ஒப்புதல் வழங்கி வந்துள்ளது. 

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செலவுகளில் ஊழியர்களுக்கான சம்பளத் தொகை 55 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் தாமதமாகியுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியிலோ சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். தற்போது பிப்ரவரி மாதத்துக்கான மொத்த சம்பளப் பாக்கி ரூ.850 கோடித் தொகையை மார்ச் 21ஆம்தேதிக்குள் வழங்கிவிடுவதாக பிஎஸ்என்எல் உறுதி யளித்துள்ளது.

Image result for theekkathir