Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, February 18, 2019

வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது.....


BSNL நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் AUAB விடுத்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், இன்று, 18.02.2019 முதல் நாடு முழுவதும் பிரமாண்டமான வெற்றியுடன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள ஊழியர்களின் 90%க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 

நமது சேலம் மாவட்டத்திலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டுள்ளது. இன்று போல், அடுத்த வரும் இரண்டு நாட்களும், வேலை நிறுத்தத்தில்  உறுதியாக கலந்து கொள்வோம்.  அரசாங்கத்திற்கு நமது ஒன்றுபட்ட சக்தியை காண்பிப்போம். நமது கோரிக்கைகளை வென்றடைவோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 



திருச்செங்கோடு 




ஆத்தூர் 





வேலூர் 







மேட்டூர் 


எளம்பிள்ளை 



எடப்பாடி 




ஏற்காடு