Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 3, 2018

DoT செயலுருடனான சந்திப்பு!

Image result for MEETING

AUAB கூட்டமைப்பின், தலைவர்கள், DoT செயலரை நேற்று(02.11.2018) சந்தித்தனர். கூட்டத்தில் AUAB தலைவர்கள், DoT துறை செயலர் உள்ளிட்ட DoT உயர் அதிகாரிகள், BSNL CMD உள்ளிட்ட BSNL உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

24.02.2018 அன்று, மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க தவறியதை தலைவர்கள் முதலில் சுட்டிக்காட்டினர். அதன் காரணமாகத் தான் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதை தலைவர்கள் விளக்கினர். 

பின்னர் நமது கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரங்கள் சுருக்கமாக:

01. மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக, அமைச்சரைவைக் குறிப்பை, DoT விரைந்து அனுப்பும் என செயலர் தெரிவித்தார். BSNL லிடம்  சில விளக்கங்கள் கோரியுள்ளதாகவும், அதன் பதில்கள் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்க பெறப்படும் என DoT செயலர் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு தலைவர்கள் கோரினர். DoT செயலர் அனைத்து சம்பிரதாயங்களையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உறுதி அளித்தார்.

02. BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை குறிப்பு தயார் செய்து, அமைச்சரகங்களிடையேயான ஆலோசனைக்கு, (INTER MINISTERIAL CONSULTATIONS) அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என சாதகமாக பதில் அளித்தார்.

03. வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில், ஓய்வூதிய பங்கீடு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை DoTயின் சாதகமான பரிந்துரையோடு அடுத்த வாரத்தில் செலவீனங்கள் துறைக்கு (Department of Expenditure) அனுப்பப்படும் என தெரிவித்தார்.

04. BSNL ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல், ஓய்வூதியத்தை மாற்றம் செய்ய, MEMBER(SERVICES) தன்னுடன் விவாதிக்க வேண்டும் என DoT செயலர் உத்தரவிட்டார்.

05. நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் பிரச்சனையில், மேலும் 2 சதவீதம் பங்களிப்பை அதிகரிக்க BSNL CMD உறுதி அளித்தார்.

DoT செயலருடனான சந்திப்புக்கு பின், AUAB தலைவர்கள் ஒன்று கூடி, விவாதங்களை பரிசீலித்தனர். 4G ஸ்பெக்ட்ரம், ஓய்வூதிய பங்களிப்பு, ஓய்வூதிய மாற்றம், விஷயங்களில் சாதகமான பதில்கள் வந்தாலும், மூன்றாவது ஊதிய மாற்ற பிரச்சனையில் தொலைத்தொடர்பு செயலரின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என AUAB தலைவர்கள் முடிவு செய்தனர். 

எனவே, 14.11.2018 அன்று நடத்த திட்டமிட்டுள்ள பேரணிகளை சக்திமிக்கதாக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 14.11.2018 அன்று நடைபெறும் AUAB கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும்.  

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்