Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 10, 2018

08.10.2018 AUAB கூட்ட முடிவுகள்

Image result for ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL


08.10.2018, அன்று, All Unions and Associations of BSNL அமைப்பின் கூட்டம், டில்லியில் நடைபெற்றது. 24.02.2018 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, மற்றும் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றின் மீது மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, கீழ்கண்ட இயக்கங்களை நடத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

01. 29.10.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது 

02. 30.10.2018 அன்று அனைத்து மட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்துவது 

03. 14.11.2018 அன்று மாவட்ட, மாநில மட்டங்களில் பேரணி நடத்துவது 

04. கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலை வந்தால், வேலை நிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டங்களுக்கு ஊழியர்களை திரட்டுவது.

தோழர்களே! ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் தான், கோரிக்கைகளை வெல்ல முடியும். எனவே, மேற்கண்ட இயக்கங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுல்படுத்துவோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்