AUAB கூட்டமைப்பின், "மூளை குழந்தை" திட்டமான, "உங்கள் வாயிற்படியில் BSNL" (BSNL AT YOUR DOOR STEPS) என்ற புதிய திட்டத்தின் துவக்கவிழா 24.09.2018, நேற்று, டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. BSNL விளம்பர தூதர் செல்வி. மேரி கோம் இந்த திட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார்.
நமது CMD., திரு. அனுபம் ஸ்ரீவத்சவா, மனித வள இயக்குனர் திருமதி சுஜாதா ராய், வாரிய இயக்குனர்கள், மாநில தலைமை பொது மேலாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு, உள்ளிட்ட AUAB தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சரிந்து வரும் BSNL வருவாயை, அதிகப்படுத்த இந்த புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. AUAB கூட்டமைப்பின் முடிவின் படி, ஒவ்வொரு BSNL ஊழியரும், அதிகாரியும், வாரத்தில் ஒரு நாள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபட வேண்டும். அதாவது, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பகுதிகளில் வேலை செய்யாத ஊழியர்களும், இனி வாரம் ஒரு நாள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் சேவை செய்ய வேண்டும்.
வியாபாரத்தை அதிகரிக்க மாநில, மாவட்ட மட்டங்களில் இதற்காக பிரத்யேக கமிட்டிகள் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவேளையில் இந்த கமிட்டி கூடி, திட்டத்தின் முன்னேற்றங்களை ஆய்வு செய்யும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்