BSNLEU சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு, 2019 ஜனவரி 8 முதல் 11 வரை கர்நாடக மாநிலம், மைசூரில் நடத்த நமது மத்திய சங்கம் திட்டமிட்டிருந்தது. 28.09.2018, நேற்று, டில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாட்டில், நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் 2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நடத்த இந்திய உழைக்கும் வர்கம் திட்டமிட்டுள்ளது.
BSNLல் வேலை நிறுத்தத்தை, வெற்றிகரமாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளதால், இன்று, 29.09.2018 டில்லியில் கூடிய நமது அகில இந்திய மையம் மாநாட்டு தேதியை மாற்ற முடிவு எடுத்துள்ளது. அதன்படி, 9வது அகில இந்திய மாநாடு 2018 டிசம்பர் 17 முதல் 20 வரை அதே மைசூரில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்